உத்தரபிரதேசத்தில் படகு கவிழ்ந்தது: மாயமான 8 பேரை தேடும் பணி தீவிரம்

2


லக்னோ: உத்தரபிரதேசத்தின் பஹ்ரைச்சில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 8 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி திவீரமாக நடந்து வருகிறது.


உத்தரபிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள பரதபூர் கிராமத்திற்கு அருகிலுள்ள கவுடியாலா ஆற்றில் 22 பேருடன் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் கிராம மக்கள் உதவியுடன் மீட்பு பணி மேற்கொண்டனர்.


இந்த விபத்தில் 60 வயது பெண் ஒருவர் நீரில் மூழ்கி இறந்தார். மேலும் ஐந்து குழந்தைகள் உட்பட எட்டு பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் 13 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.


ஆற்றில் அதிக நீரோட்டம் காரணமாக படகு கவிழ்ந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Advertisement