காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் உயர்ந்தது
சென்னை: சென்னையில் இன்று (அக் 30) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,800 குறைந்த நிலையில் மாலையில் ரூ.1,600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.90,400க்கு விற்பனை ஆகிறது.
சர்வதேச நிலவரங்களால் நம் நாட்டில் கடந்த இரு வாரங்களாக, ஆபரண தங்கம் விலையில் ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (அக் 28) ஆபரண தங்கம் கிராம் 11,075 ரூபாய்க்கும், சவரன் 88,600 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 165 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று (அக் 29) காலை, தங்கம் விலை கிராமுக்கு 135 ரூபாய் உயர்ந்து, 11,210 ரூபாய்க்கு விற்பனையானது.
சவரனுக்கு 1,080 ரூபாய் அதிகரித்து, 89,680 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து, 166 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று மாலை, மீண்டும் தங்கம் விலை, கிராமுக்கு 115 ரூபாய் உயர்ந்து, 11,325 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 920 ரூபாய் அதிகரித்து, 90,600 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. நேற்று ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு 2,000 ரூபாய் அதிகரித்தது.
இந்நிலையில், இன்று (அக் 30) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,800 குறைந்து ஒரு சவரன் ரூ.88,800க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.225 குறைந்து ஒரு கிராம் ரூ.11,100க்கு விற்பனை ஆனது.
ஆனால், மாலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.90,400 ஆக விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கம் ரூ.11,300க்கு விற்பனை ஆகிறது.
வெள்ளி விலை கிராமிற்கு ரூ.1 குறைந்து, ஒரு கிராம் ரூ.165க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
காலையில் குறைந்த தங்கம் மாலையில் உயர்ந்தது... காலையில் கடையில் கூட்டம் குறைவு, அதனால் விலையும் குறைவு .. மாலையில் கூட்டம் அதிகம், அதனால் விலையும் அதிகம்...
மேலும் குறைவான தங்கம்
சூப்பர்
தங்கம் இந்த விலையில் வாக்குறார்கள் மக்கள்மேலும்
-
தொண்டர்களின் உற்சாகம் புது ஆற்றலை அளிக்கிறது: பிரதமர் மோடி
-
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நியமனம்: நவ.,24ல் பதவியேற்பு
-
தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து பேருக்கு ஐஏஎஸ் அந்தஸ்து வழங்கப்பட்டது
-
ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: தேர்தல் கமிஷனில் பாஜ., மனு
-
இந்தியாவுக்கு மேலும் 6 மாதம் சலுகை: அமெரிக்கா முடிவில் மாற்றம்
-
பிணைக்கைதிகளாக அடைக்கப்பட்ட குழந்தைகள் மீட்பு; குற்றவாளி சுட்டுக்கொலை