கூடலுாரில் சிறப்பு மருத்துவ முகாம்
கூடலுார்: கூடலுாரில் நடந்த சிறப்பு மருத்துவ முகாமில் ஏராளமானோர் சிகிச்சை மற்றும் ஆலோசனை பெற்றனர்.
கூடலுார் என்.எஸ்.கே.பி., மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
ரத்தப் பரிசோதனை, ரத்த அழுத்தம், பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பு, மகப்பேறு மற்றும் பெண்கள் நலம், குழந்தைகள் நலம், இதயம், நரம்பியல், தோல், கண், காது, மூக்கு, தொண்டை, மனநலம், சர்க்கரை நோய், சித்தா உள்ளிட்ட 17 துறையைச் சேர்ந்த மருத்துவ சிகிச்சை , ஆலோசனை வழங்கப் பட்டது.
பார்வையிட வந்த கலெக்டர் ரஞ்ஜீத் சிங்கை பள்ளித் தாளாளர் ராம்பா வரவேற்றார்.
கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், சித்தா பெட்டகம், தொழிலாளர் நலவாரிய அட்டை, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கு வீல் சேர், அடையாள அட்டைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
முகாமிற்கான ஏற்பாடுகளை வட்டார மருத்துவ அலுவலர் முருகன் செய்திருந்தார்.
டி.ஆர்.ஓ., ராஜ்குமார், மருத்துவ இணை இயக்குனர் கலைச்செல்வி, மாவட்ட சுகாதார அலுவலர் ஜவஹர்லால், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சசிதீபா, ஆர்.டி.ஓ., சையது முகமது, கூடலுார் நகராட்சி கமிஷனர் முத்துலட்சுமி, தலைவர் பத்மாவதி, தாசில்தார் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.