அடிபட்டு இறந்த குரங்குக்கு கண்ணீர் சிந்திய குரங்குகள்

சென்னிமலை:சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில், ஆறாவது கொண்டை ஊசி வளைவில் ஒரு குரங்கு கூட்டம் சாலையை கடந்த போது, அடையாளம் தெரியாத கார் மோதியதில் ஒரு குரங்கு இறந்தது. இதனால் சக குரங்குகள் இறந்த குரங்கின் உடல் அருகே அமர்ந்து கண்ணீர் விட்டு அழுதது. தகவலறிந்து சென்னிமலை வனச்சரக அலுவலர் துரைசாமி தலைமையில் வனத்துறையினர் சென்று, குரங்கு உடலை மீட்டு சென்றனர்.
மலைப்பாதையில் குரங்குகள் நடமாட்டம் இருப்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் மலைப்பாதை சாலையில் வாகனத்தை மெதுவாக இயக்க வேண்டும். அல்லது வேகத்தடை அமைக்க வேண்டும் என்றும் வனத்துறையினர்
தெரிவித்தனர்.

Advertisement