பிரசாரத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அரசியல் கட்சிகளுடன் 6ல் அரசு ஆலோசனை

சென்னை: பிரசாரங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பதற்காக, அரசியல் கட்சிகளுடன் நாளை மறுநாள், அமைச்சர்கள் ஆலோசனை நடத்தவுள்ளனர்.

இதுகுறித்து, அரசு வெளியிட்டு உள்ள அறிக்கை:



கரூரில் செப்டம்பர், 27ம் தேதி நடந்த அரசியல் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர்.

இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கு, வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க, சென்னை உயர் நீதி மன்றம் அறிவுறுத்தி உள்ளது.

அதன்படி, தமிழகத்தில் பொதுக்கூட்டங்கள் மற்றும் பிரசாரங்கள் நடத்துவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது தொடர்பாக, தங்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை தெரிவிப்பதற்காக, தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்களை கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம், 6ம் தேதி காலை 10:30 மணிக்கு, தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது.

மூத்த அமைச்சர்கள் தலைமையில் நடக்கவுள்ள இந்த கூட்டத்தில் பங்கேற்கும்படி, தலைமை செயலர் முருகானந்தம் வாயிலாக, அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement