வாக்காளர் பட்டியல் திருத்த படிவம் வழங்கும் பணி; அ.தி.மு.க.,வினர் ஆய்வு
விழுப்புரம்: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிக்கான கணக்கீட்டு படிவம் வழங்கியது தொடர்பாக கோலியனுார் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் ஆய்வு செய்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிக்கான கணக்கீட்டு படிவம், ஓட்டுச்சாடி நிலை அலுவலர்கள் மூலம் நேற்று முதல் வழங்கும் பணி துவங்கியது.
இதில், கோலியனுார் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில், வாக்காளர்களிடம், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்காளர்ளிடம் சரியான முறையில் படிவம் வழங்குகின்றனரா என கோலியனுார் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆய்வு செய்தனர்.
அத்தியூர் திருவாதி, பிடாகம், வேலியம்பாக்கம், சித்தாத்துார் திருக்கை, கண்டமானடி காலனி, கண்டமானடி, வி.அரியலுார் ஆகிய கிராமங்களில் வாக்காளர்களிடம் படிவம் வழங்கியதை தெற்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு தலைமையில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆய்வு செய்தனர்.
ஒன்றிய மாணவரணி செயலாளர் பாக்கியராஜ், கவுன்சிலர் அமுதா கணேசன், மாவட்ட பிரதிநிதி ராஜ், ஜெ., பேரவை துணை செயலாளர் ரவிச்சந்திரன், இளைஞரணி இணை செயலார் பாலசுப்ரமணி உடனிருந்தனர்.