மொபைல் போன்கள் ஒப்படைப்பு
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி பகுதியில் காணாமல் போன 11 மொபைல் போன்களை போலீசார் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
விக்கிரவாண்டி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் காணாமல் போன மொபைல் போன்கள் குறித்து புகார்களின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்து 11 மொபைல் போன்களை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
நேற்று விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் டி.எஸ்.பி., சரவணன் மொபைல் போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். இன்ஸ்பெக்டர் சத்தியசீலன், சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement