குழந்தை திருமணம் தடுப்பு குறித்து கிராமிய கலை நிகழ்ச்சி
குளித்தலை, குளித்தலை பஸ் ஸ்டாண்டில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, கரூர் மாவட்டம் சார்பில் குழந்தை திருமணம் தடுத்தல் குறித்த கிராமிய கலை நிகழ்ச்சி நடந்தது. இதில், குழந்தை திருமணம் செய்து கொள்வதால், உடல் ரீதியாக பாதிக்கப்படுகிறார்.
மேலும் குடும்ப அனுபவம் ஏதும் அறியாமல் மனரீதியாகவும் பாதிப்புக்கு உள்ளாகிறார். குழந்தை திருமணம் நடத்த முன்வரும் குழந்தையின் பெற்றோர், திருமணம் செய்து கொள்ளும் குடும்பத்தார் மற்றும் திருமணத்திற்கான ஏற்பாடு செய்யும் அர்ச்சகர், பூசாரி, மேளம் அடிப்பவர்கள், திருமண மண்டபம் வாடகைக்கு கொடுப்பவர் ஆகியோர் மீது, காவல்துறை மூலம் வழக்கு பதியப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு அனைவரும் சிறை செல்வர்.
குழந்தை திருமணம் நடைபெறுவது குறித்து பொதுமக்கள் மற்றும் உறவினர்கள், 1090 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தப்பாட்டம், கரகாட்டம் மற்றும் சினிமா பாடல்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கலை நிகழ்ச்சியை லாலாப்பேட்டை ஸ்ரீதர் கலைக்குழுவினர் நடத்தினர்.
இதேபோல் தோகைமலை பஸ் ஸ்டாண்ட், கிருஷ்ணராயபுரம் பஸ் ஸ்டாண்ட் ஆகிய இடங்களிலும், குழந்தை திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கிராமிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது.