குரங்குகள் சேட்டையால் சிறுவர், சிறுமியர் அவதி



கரூர், வெள்ளியணை அருகே, குரங்குகள் செய்யும் சேட்டைகளால் பொதுமக்கள், சிறுவர், சிறுமியர் அச்சத்தில் உள்ளனர்.


வெள்ளியணை அருகே கே.பி. தாழப்பட்டி கிராமம் உள்ளது. அதில் தொடக்கப்பள்ளி மற்றும் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடவூர் வனப்பகுதிகளில் இருந்து வந்த, 10க்கும் மேற்பட்டு குரங்குகள் கே.பி. தாழப்பட்டி பகுதியில், கடந்த சில நாட்களாக முகாமிட்டுள்ளது. அந்த பகுதியில் உணவு பொருட்களை வாங்கி செல்லும் மக்களிடம் இருந்து, குரங்குகள் ஆக்ரோஷம் காட்டி பறித்து கொண்டு ஓடுகிறது.

மேலும், ஓட்டல்கள், டீ கடைகளிலும் குரங்குகள் கைவரிசையை காட்டி, உணவு பொருட்களை துாக்கி செல்கிறது. எனவே வனத்துறை ஊழியர்கள், குரங்குகளை பிடித்து மீண்டும் கடவூர் மலைப்பகுதியில் கொண்டு போய் விட வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement