ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்!

2

நம் நாட்டில் குடும்ப அரசியல் ஆதிக்கம் செலுத்துவது, தலைமை என்பது பிறப்புரிமை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது. இது, ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல். தகுதி அடிப்படையில் தலைவரை தேர்ந்தெடுப்பது, எத்தனை ஆண்டுகள் பதவியில் நீடிப்பது உள்ளிட்டவற்றை வரையறுப்பது அவசியம்.

சசி தரூர் லோக்சபா எம்.பி., காங்கிரஸ்


அடமானத்திற்கு வைப்பர்!



ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தேஜஸ்வி அளித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளை கண்டு பா.ஜ.,வினர் பதற்றமடைந்துள்ளனர். தே.ஜ., கூட்டணி, பீஹாரை அடமானம் வைக்க விரும்புகிறது. எனினும், இந்த முறை பீஹார் மக்கள் சமூக நல்லிணக்க ஆட்சியை தேர்ந்தெடுப்பர். எனவே, பா.ஜ.,விடம் இருந்து பீஹாரை காப்பாற்றுங்கள்.

அகிலேஷ் யாதவ் தலைவர், சமாஜ்வாதி

அவமானத்திற்கு அமைச்சகம்!



பா.ஜ., அரசின் வளர்ச்சியை பற்றி பேசாமல், எதிர்க்கட்சி தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் அவம தித்து பேசி வருகின்றனர். இவர் தலைமையிலான அரசு, அவமான அமைச்சகத்தை உருவாக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தான், பா.ஜ., அரசு அதிக கவனம் செலுத்துகிறது.

பிரியங்கா லோக்சபா எம்.பி., - காங்.,

Advertisement