'கொடை'யில் முன்கூட்டியே துவங்கிய நீர் பனி தாக்கம்

கொடைக்கானல்: கொடைக்கானல் மலைப்பகுதியில் சீதோஷ்ணநிலை மாற்றத்தால் முன்கூட்டியே நீர் பனி விழத் தொடங்கி உள்ளது.

டிசம்பர் முதல் வாரத்தில் பனிக்காலம் துவங்கும் நிலையில் நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழை இதுவரை சரிவர பெய்யாத நிலையில் சில தினங்களாக பகலில் வெயிலின் தாக்கம் கோடையை மிஞ்சும் அளவிற்கு வெளுத்து வாங்குகிறது.

பகலில் 28 டிகிரி செல்சியஸ், இரவில் 9 முதல் 11 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது. இதையடுத்து மாலை 4:00 மணிக்கு பனியின் தாக்கம் அதிகரித்து கடுங்குளிர் நிலவுகிறது.

காலையில் மரம், செடி, கொடிகளில் நீர் பனியின் தாக்கம் அதிகரித்துள்ளது. முன்கூட்டியே துவங்கிய பனியால் பாசனம் , குடிநீர் தட்டுப்பாடு வரும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

Advertisement