தி.மு.க.,வில் வாரிசு அரசியல்: கொதிக்கும் தொண்டர்கள்
சென்னை: தி.மு.க.,வில் கட்சியின் நிர்வாக வசதிக்காகவும், கட்சிப் பணிகள் சிறப்பாக நடக்கவும், வேலுார் மாவட்டம், வேலுார் வடக்கு, வேலுார் தெற்கு என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு உள்ளன. வேலுார் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக நந்தகுமார் எம்.எல்.ஏ., நியமிக்கப்பட்டு உள்ளார்.
இவருக் கு வேலுார், அணைக்கட்டு, குடியாத்தம் ஆகிய சட்டசபை தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. வேலுார் வடக்கு மாவட்ட பொறுப்பாளராக, தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் எம்.பி., நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு காட்பாடி, கே.வி.குப்பம் ஆகிய இரு சட்டசபை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை கட்சியின் பொதுச்செயலர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.
வேலுார் மாவட்டத்தில் வன்னியர் சமுதாயத்திற்கு முக்கியத்துவம் இல்லை என்ற குறையை போக்கவும், வரும் சட்டசபை தேர்தல் செலவுகளை முழுமையாக ஏற்றுக்கொள்ளும் வகையிலும், வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த கதிர் ஆனந்திற்கு, மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கப் பட்டுள்ளது.
ஏற்கனவே, வேலுார் மாவட்ட தி.மு.க.,வில் ஐந்து சட்டசபை தொகுதிகளை வைத்திருந்த நந்தகுமார், நாயுடு சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், துரைமுருகனின் சிஷ்யராக கடந்த 30 ஆண்டுகளாக இருக்கிறார். எனவே, அவருக்கு மூன்று சட்டசபை தொகுதிக ளை ஒதுக்கி, மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதில், துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்துக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதால், கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும், தி.மு.க.,வில் வாரிசு அரசியல் தொடரலாமா? என சமூக வலைதளங் களில் கொந்தளிக்கத் துவங்கி உள்ளனர்.
அதேபோல மாவட்டத் தில் அதிகமாக உள்ள முதலியார் இனத்தைச் சேர்ந்தோருக்கு பிரதிநிதித் துவம் அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் தொண்டர்களால் வைக்கப் படுகிறது.
வெட்கம், மானம், ரோஷம், சூடு, சொரணை கொஞ்சமாவது உள்ள தொண்டர்கள் திமுகாவில் இருக்கிறார்களா என்ன, கொதிப்பதற்கு? எல்லாம் வெளி வேஷம்.
குடும்பம் அரசியல் என்பது இப்போது தான் தெரிகிறதா உடன் பிறப்புகளுக்கு கருணாநிதி காலத்தில் இருந்து இது தொடர்கிறது . உடன்பிறப்பு சொம்பு தூக்குவதையே பெருமையாக கருதி வந்துள்ளது இப்போது மட்டும் என்ன திடீர் என்று மானம் ரோஷம் சூடு சொரணை எல்லாம் வந்து விட்டது
உடன் பிறப்புகள் இப்பதான் கொஞ்சம், கொஞ்சமா புரிந்து கொள்ள ஆரம்பித்துள்ளார்கள். கடைசி வரை இதை கடைபிடிங்க . 200/- க்கும் குவாட்டருக்கும் அடிமையா கிடக்காதீங்க.
இவர்கள் பணி என்ன? கட்சி பணி எவ்வாறு செய்கின்றனர்? அரசு நிர்வாகத்தில் தலையீடு இன்றி கட்சியின் பணி செய்வார்களா? அரசு டெண்டர் காண்ட்ராக்ட் பணி ஆகியவற்றில் தலையிட மாட்டார்களா? மற்றவர்களை மிரட்டி கமிஷன் ஏதும் வாங்க மாட்டார்களா? போலிஸ் நிலையத்தில் கட்டை பஞ்சாயத்து செய்ய மாட்டார்களா?
நான்காவது தலைமுறை வரை குடும்ப அரசியல் ஊடுருவியாச்சு.. கடைசியா இது குண்டர்களுக்கும் .... நோ ... .நோ .... தொண்டர்களுக்கும் தெரிஞ்சு போச்சா >>>>
நாங்கள் சாதியை ஒழித்து விட்டோம்ங்க. பெரியார் மண்ணு வாயில தின்னு
திமுக ஆக சிறந்த சனநாயக கோட்பாடுகளை கொண்ட மாபெரும் கட்சி என்பது அனைவருக்கும் தெரியும். அது மட்டுமல்ல குலதொழில் முறைக்கு எதிரானவர்கள்.
வாரிசு அரசியல்தான் திமுகவின் பலம். கனிமொழி என்ன பல போராட்டங்கள் செய்து சிறை சென்றா எம்பி பதவி பெற்றார் ?
தொண்டர்கள் கேட்டுக் கொண்டதற்க்கு மட்டுமே இணங்க ,தலைமை செயல்படும் ஒரே கட்சி தி. மு. க.
சே சே தொண்டர்கள் கொதிக்கிரார்களா.. இல்லவே இல்லை அவர்களுக்கு தேவையான ருவா இறநூறு தினப்படி ஒரு ஒசி குவார்டரும் கோழி பிரியாணியும் கழகம் கொடுப்பதால் பரம்பரையாக வாழ்க கோசம் போடுவதிலும் போஸ்டர் ஒட்டுவதிலும் ஆக பெருமை கொள்கிறார்கள் என்று முத்துவேலு கட்டுமர இருவத்தி மூனாம் புலிகேசி தமிழர்களின் துன்பனிதி அவர்கள் பெருமை கொள்கிறார்...இது கழகத்தின் மீது அவதூறு பரப்பும் எதிர் கட்சிகளின் சூழ்ச்சி உடன் பிறப்பே...நமது பொது செயலர் கட்ட துறை கூட தும்பனிதியின் அமைச்சரவையிலும் நான் இருப்பேன் என்று ஆனந்த கண்ணீர் விட்டு கூறியதை மறந்து விட கூடாது.. ஆக அஞ்சாமல் துஞ்சாமல் நீ களம் ஆடி கழகத்துக்கு வெற்றி தேடி தருவது கடமை மட்டும் அல்லாமல் நமது விங்யானி கட்டு மரத்துக்கு செய்யும் பெருமை மிகு சிறப்பு ஆகும்....மேலும்
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 சரிவு: ஒரு சவரன் ரூ.89,440க்கு விற்பனை
-
நியூயார்க் நகர மேயர் தேர்தலில் வெற்றி பெற்றார் வம்சாவளி இந்தியர் ஜோஹ்ரான் மம்தானி
-
நாசாவை வழிநடத்த எலான் மஸ்க் நண்பர் நியமனம்; அதிபர் டிரம்ப் அறிவிப்பு
-
வேட்பாளர் வாய்ப்புக்கு 'பென் டீமிடம்' 'இன்புளுயன்ஸ்' செய்யும் தி.மு.க.,வினர்; 'போட்டுக்கொடுக்கும்' அரசியலும் ஜரூர்
-
ட்ரையம்ப் 'ஸ்பீடு ட்ரிபிள் 1200 ஆர்.எக்ஸ்.,' 3.2 வினாடியில், 100 கி.மீ., வேகம்
-
'மினி கன்ட்ரிமேன் ஜே.சி.டபுள்யூ., ஆல்4' பெட்ரோல் மாடலில் முதல் முறையாக அறிமுகம்