வடகொரியா முன்னாள் கவுரவ அதிபர் மறைவு

பியாங்யாங்: வடகொரியாவின் முன்னாள் கவுரவ அதிபர் கிம் யோங் நம், 97, உடல் நலக் குறைவால் நேற்று முன்தினம் காலமானார்.

கிழக்காசிய நாடான வடகொரியாவில், 1998 முதல் 2019 வரை வடகொரிய மக்கள் சபையின் தலைவராக இரு ந்தவர் கிம் யோங் நம். இது, அந்நாட்டின் கவுரவ அதிபர் பதவி போன்றது.

கடந்த, 2019ல் அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற கிம் யோங் நம், அவ்வப்போது அரசு நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்று வந்தார்.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அவருக்கு புற்றுநோய் ஏற்பட்டது. இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

Advertisement