கல்லுாரி மாணவர் மாயம்

குள்ளஞ்சாவடி: கல்லுாரி மாணவர் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

குள்ளஞ்சாவடி அடுத்த ஆயிக்குப்பம், புதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அருள் பிரகாசம் மகன் கோகுல், 20; கடலுார் தனியார் கல்லூரி ஒன்றில் பி.பி.எம்., மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் காலை வழக்கம் போல கல்லுாரிக்கு சென்றவர் மாலை வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் தகவல் இல்லை.

இதையடுத்து கோகுலின் தாயார் மகாலட்சுமி, 37, மகன் மாயமானது குறித்து குள்ளஞ்சாவடி போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement