முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கோரிக்கை
புதுச்சேரி: முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க புதுச்சேரி மாநில மாணவர் மற்றும் பெற்றோர் நலசங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சங்க தலைவர் பாலசுப்ரமணியன் அறிக்கை:
2025-26ம் கல்வியாண்டில் புதுச்சேரி மாநிலத் தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள 387 முதுநிலை மருத்துவ இடங்களில் 194 இடங்கள் அரசு ஒதுக்கீடு; 157 இடங்கள் நிர்வாக ஒதுக்கீடு.
அதன்படி, மணக்குளவிநாயகர், வெங்கடேஸ்வரா, பிம்ஸ் மருத்துவ கல்லுாரிகளில் மொத்தம் உள்ள முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான இடங்கள் எம்.டி., எம்.எஸ்., படிப்புகளுக்கு 158 இடங்கள் சென்டாக் மூலமும், 157 இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டில் கலந்தாய்வு மூலம் நடக்கிறது.
இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லுாரியில் மத்திய மருத்துவ கவுன்சில் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்ட 72 இடங்களில் 36 அரசு ஒதுக்கீடாகவும், 36 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டில் மதிப்பெண் அடிப்படையில் சென்டாக் மூலம் கலந்தாய்வு நடக்கிறது.
194 மதுநிலை மருத்துவ இடங்களுக்கு புதுச்சேரி மாணவர்கள் மத்திய மருத்துவ கவுன்சில் கமிட்டி இணையதளம், புதுச்சேரி அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு சென்டாக் இணையதளத்தில் விண்ணப்பித்து கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
மேலும்
-
கூட்டணி பற்றி முடிவு எடுக்க விஜய்க்கு அதிகாரம்: தவெக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம்
-
அமெரிக்க பொருட்கள் மீதான 24% வரிவிதிப்பு நிறுத்தம்: சீனா அறிவிப்பு
-
சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதல்; பலி 11 ஆக உயர்வு; உயிர் பிழைத்தவர்கள் பகீர் தகவல்
-
அமெரிக்க தேர்தலில் டிரம்ப் கட்சி படுதோல்வி
-
4 மணி நேரம் 25 நிமிடம் என்ன செய்தது போலீஸ்: கோவை பாலியல் வழக்கில் இபிஎஸ் கேள்வி
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 சரிவு: ஒரு சவரன் ரூ.89,440க்கு விற்பனை