வாக்காளர் பட்டியல் பணி கலெக்டர் எச்சரிக்கை
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.
கடலுாரில் வாக்காளர் பட்டியல் திருத்த பணி நடந்து வருகிறது. இந்நிலையில், நெல்லிக் குப்பத்தில் நடைபெறும்
பணியை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார்.
ரத்தினம் தெருவில் உள்ள வீட்டுக்கு சென்று தேர்தல் ஆணையம் வழங்கிய படிவத்தை கொடுத்து எப்படி பூர்த்தி செய்து வழங்க வேண்டுமென அலுவலர்களிடம் கலெக்டர் கேட்டார். அப்போது சரியாக விளக்கம அளிக்க முடியாமல் அதிகாரிகள் திணறினர். இதனால் டென்ஷனான கலெக்டர், முறையாக பணி செய்யாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
இந்த நிகழ்வில், துணை கலெக்டர் டியூட்பர்க்கர், ஆதிதிராவிடர் நல அலுவலர் கமலம், தாசில்தார் பிரகாஷ், கமிஷ்னர் கிருஷ்ணராஜன் உடனிருந்தனர்.
இந்த பகுதியில், மொத்தமுள்ள 38 பூத்துகளில் 26 பூத்துகளுக்கு மட்டுமே படிவங்கள் வந்துள்ளது குறிப்பிடத் தக்கது.
மேலும்
-
கூட்டணி பற்றி முடிவு எடுக்க விஜய்க்கு அதிகாரம்: தவெக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம்
-
அமெரிக்க பொருட்கள் மீதான 24% வரிவிதிப்பு நிறுத்தம்: சீனா அறிவிப்பு
-
சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதல்; பலி 11 ஆக உயர்வு; உயிர் பிழைத்தவர்கள் பகீர் தகவல்
-
அமெரிக்க தேர்தலில் டிரம்ப் கட்சி படுதோல்வி
-
4 மணி நேரம் 25 நிமிடம் என்ன செய்தது போலீஸ்: கோவை பாலியல் வழக்கில் இபிஎஸ் கேள்வி
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 சரிவு: ஒரு சவரன் ரூ.89,440க்கு விற்பனை