ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் இலவச தொழில் பயிற்சி முகாம்
கள்ளக்குறிச்சி: ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் இந்திய அரசின் எம்.எஸ்.எம்.இ., மற்றும் சென்னை டி.எப்.ஓ., சார்பில் இலவச தொழில் பயிற்சி முகாம் துவக்க விழா நடந்தது.
கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு, தமிழக அரசின் சிறு, குறு தொழில் நிறுவனங்களின் உதவி இயக்குநர் அல்தாப்அஹமத் தலைமை தாங்கினார்.
கல்லுாரி துணை முதல்வர் ஜான்விக்டர் முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் வரவேற்றார். தொழில் முனைவோர் பயிற்றுநர் சித்தேஷ்வரன், டீன் அசோக் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சந்திரசேகரன் பங்கேற்று, புதிதாக தொழில் தொடங்க மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில் வழங்கப்படும் உதவிகள், தொழில் முனைவோருக்கான மானிய திட்டங்கள், வங்கிகள் வழங்கும் கடனுதவி, உதயம் ரிஜிஸ்ட்ரேஷன் குறித்து பேசி, மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதிலளித்தார்.
கம்ப்யூட்டர் சாம்பிராணி, பினாயில், வாஷிங் பவுடர், லிக்யூட் கிளினீங் பவுடர், லிக்யூட் சோப் ஆயில், குளியல் சோப், ரீப்பேக்கிங், காட்டன் வேஸ்ட் நுால் பிரித்தல், ஏற்றுமதி தொழில்களை எளிதாக மேற்கொண்டு, அதிகளவு லாபம் ஈட்டும் வழிமுறைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது. கல்லுாரி மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். கணினி அறிவியல் துறைத்தலைவர் சக்திவேல் நன்றி கூறினார்.
மேலும்
-
கூட்டணி பற்றி முடிவு எடுக்க விஜய்க்கு அதிகாரம்: தவெக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம்
-
அமெரிக்க பொருட்கள் மீதான 24% வரிவிதிப்பு நிறுத்தம்: சீனா அறிவிப்பு
-
சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதல்; பலி 11 ஆக உயர்வு; உயிர் பிழைத்தவர்கள் பகீர் தகவல்
-
அமெரிக்க தேர்தலில் டிரம்ப் கட்சி படுதோல்வி
-
4 மணி நேரம் 25 நிமிடம் என்ன செய்தது போலீஸ்: கோவை பாலியல் வழக்கில் இபிஎஸ் கேள்வி
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 சரிவு: ஒரு சவரன் ரூ.89,440க்கு விற்பனை