ஆடு திருட முயன்ற மூன்று பேர் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணவரெட்டியை சேர்ந்தவர் சின்னன்னன் மகன் முருகன், 42; விவசாயி. ஆடு, மாடுகள் வளர்த்து வருகிறார். கடந்த 2ம் தேதி இரவு வீட்டிற்கு முன் உள்ள ஷெட்டில் 10 வெள்ளாடுகளை கட்டி வைத்து விட்டு, முருகன் வீட்டிற்குள் துாங்கினார்.

3ம் தேதி அதிகாலை 2:00 மணிக்கு நாய் குரைக்கும் சத்தம் கேட்டு எழுந்த முருகன் வெளியே வந்தார். அப்போது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் ஒரு வெள்ளாட்டினை துாக்கி செல்ல முயன்றனர். முருகன் சத்தமிட்டதால் எழுந்த அக்கம், பக்கத்தினர் பைக்கில் செல்ல முயன்ற மர்ம நபர்களை மடக்கி பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், ஆடு திருட முயன்றவர்கள் தென்கீரனுார் கிராமத்தை சேர்ந்த சீனுவாசன் மகன் காசிநாதன், 33; வெங்கடாசலம் மகன் மாரியாப்பிள்ளை, 35; சின்னசாமி மகன் வினோத், 38; என்பது தெரிந்தது. இதையடுத்து மூவரையும் வரஞ்சரம் போலீசார் கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர்.

Advertisement