தேசிய ஒற்றுமை தின ஊர்வலம்

புதுச்சேரி: காலாப்பட்டு, பரூக் மரக்காயர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் சர்தார் வல்லபாய் பட்டேல் 150வது பிறந்த நாளை முன்னிட்டு தேசிய ஒற்றுமை தின, ஊர்வலம் நடந்தது.

ஊர்வலத்தை துணை முதல்வர் பிரேம்குமார் ஜூலியன் கொடியசைத்து துவங்கி வைத்தார். தலைமை ஆசிரியர் பூங்குன்றன், பொறுப்பாசிரியர் வேல்விழியன், மாநில நாட்டு நலப்பணித்திட்ட அதிகாரி சதீஷ்குமார், ஒருங்கிணைப்பாளர் கலைவாணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை திட்ட அலுவலர் ரமணி செய்திருந்தார்.

Advertisement