டிஐஜி கார்த்திக்கிற்கு லஞ்ச ஒழிப்புத் துறையில் சிறந்த புலனாய்வுக்கான விருது
திருவனந்தபுரம்: திருவண்ணாமலையை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி கார்த்திக்கிற்கு கேரள லஞ்ச ஒழிப்புத் துறையில் சிறந்த புலனாய்வுக்கான முதல்வர் விருது வழங்கப்பட்டது.
கேரள லஞ்ச ஒழிப்புத் துறையில் கடந்த 2024ம் ஆண்டின் சிறந்த புலனாய்வுக்கான முதல்வர் விருது வழங்கும் விழா திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில் கேரள முதல்வர் பினராயி விஜயன், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனர் மனோஜ் ஆபிரகாம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சிறந்த புலனாய்வுக்கான கவுரவ பதக்கம் டிஐஜி கார்த்திக்கிற்கு வழங்கப்பட்டது. முதல்வர் பினராயி விஜயன் இந்த விருதை வழங்கினார்.
திருவண்ணாமலையைச் சேர்ந்தவர்
திருவண்ணாமலை துரிஞ்சாபுரத்தை சேர்ந்த கார்த்திக் 2011ம் ஆண்டு கேரளா கேடர் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். இவர் ஏற்கனவே சிறந்த புலனாய்வுக்கான மத்திய உள்துறை அமைச்சரின் விருதையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.