வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிராக திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்

3

சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிராக வரும் 11ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பட்டம் நடத்தப்போவதாக திமுக கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன.


தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி, நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு, தி.மு.க., காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனை எதிர்த்து திமுக கூட்டணி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.


இந்நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிராக தேர்தல் கமிஷனை கண்டித்து வரும் 11ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக, காங்கிரஸ், விசிக மற்றும் இடதுசாரி கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன.

Advertisement