மாநில முதல்வர் கோப்பை போட்டி: மாணவர்கள் அசத்தல்
மதுரை: முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான தடகளப் போட்டிகளில் மதுரையைச் சேர்ந்த பள்ளி, கல்லுாரி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள் வெற்றி பெற்றனர்.
பள்ளிகளுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் ஓ.சி.பி.எம். பள்ளி ஹர்ஷிதா வெண்கல பதக்கம் வென்றார். செஸ் போட்டியில் கல்வி பள்ளி சான்ஷா முதலிடம், ஜஸ்வந்த் 3ம் இடம், சிலம்பப் போட்டியில் சி.இ.ஓ.ஏ., பள்ளி கவின் சூர்யவரதன் முதலிடம், நிகியா 3ம் இடம் பெற்றனர். கேரம் இரட்டையர் பிரிவில் சி.இ.ஓ.ஏ. பள்ளி அபிநவ் கார்த்தி, ஆகாஷ் 3ம் இடம் பெற்றனர். 100 மீட்டர், 200 மீட்டர் நீச்சல் பட்டர்பிளை பிரிவில் லீ சாட்லியர் பள்ளி ரோஷனி முதலிடம் பெற்றார். வெயிட் லிப்டிங் 58 கிலோ பிரிவில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பள்ளி அனுஷ் பிரீத்தி முதலிடம் 71 கிலோ பிரிவில் தனபால் பள்ளி சஞ்சய் 3ம் இடம், ஜூடோ 55 கிலோ பிரிவில் ஜாஸ் பள்ளி கஜகேஸ்வரன் முதலிடம் பெற்றனர்.
ஜிம்னாஸ்டிக் ஸ்டில் ரிங் பிரிவில் டி.வி.எஸ். பள்ளி ஆதித்யா சர்வேஷ் 2ம்இடம், ஏ.பி.டி. துரைராஜ் பள்ளி அக் ஷய் பிரியன் 3ம் இடம், டேபிள் வால்ட் பிரிவில் எம்.ஏ.வி.எம்.எம். பள்ளி முகமது அயாஸ் 2ம் இடம், பாட்மின்டன் இரட்டையர் பிரிவில் லீ சாட்லியர் பள்ளி ஜெனோ ரீகன், சச்சின் 2ம் இடம், ஒற்றையர் பிரிவில் சி.இ.ஓ.ஏ., பள்ளி அனுஷ்கா ஜெனிபர் முதலிடம், இரட்டையர் பிரிவில் அனுஷ்கா ஜெனிபர் , சிவரஞ்சனா 3ம் இடம் பெற்றனர்.
கல்லுாரிகளுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் அமெரிக்கன் கல்லுாரி ஷியாம் 2ம் இடம், 110 மீட்டர் தடைதாண்டும் ஓட்டத்தில் ரித்திக் ராகுல் 2ம் இடம், 400 மீட்டர் ஓட்டத்தில் ஸ்ரீனிவாஸ் 3ம் இடம், 200 மீட்டர் ஓட்டத்தில் லேடிடோக் கல்லுாரி சாய் சன்யுக்தா 3ம் இடம் பெற்றனர். ஆடவர் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டியில் அமெரிக்கன் கல்லுாரி சுஷ்வத், இரட்டையர் பிரிவில் சுஷ்வத், வெங்கடேஷ்குமார் 3ம் இடம், மகளிர் பிரிவில் லேடிடோக் கல்லுாரி தர்ஷனா, இரட்டையர் பிரிவில் தனஸ்ரீ, தர்ஷனா 3ம் இடம் பெற்றனர். கேரம் இரட்டையர் பிரிவில் தியாகராஜர் கல்லுாரி தர்ஷிகா, ஹரீஷ்மா 2ம் இடம் பெற்றனர். 100 மீட்டர் நீச்சல் ப்ரீஸ்டைல் பிரிவில் யாதவர் கல்லுாரி குணசீலன் 3ம் இடம், 100 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் பிரிவில் குருபிரசாத் 3ம் இடம் பெற்றனர். வெயிட் லிப்டிங் 48 கிலோ பிரிவில் லேடிடோக் கல்லுாரி ரோகினி, 86 கிலோ பிரிவில் பூஜா 2ம் இடம், 110 கிலோ பிரிவில் உசிலம்பட்டி பி.எம்.டி. கல்லுாரி சக்தி பிரணவ் முதலிடம், வாள்சண்டை எபி பிரிவில் தியாகராஜர் கல்லுாரி ஹரீஷ் 3ம் இடம் பெற்றனர். குத்துச்சண்டை 67 கிலோ பிரிவில் பி.எம்.டி. கல்லுாரி மனோஜ் முதலிடம்
மாற்றுத்திறனாளிகள் பிரிவு 100 மீட்டர் ஓட்டத்தில் லேடிடோக் கல்லுாரி அமல்யா ஈஸ்வரி 2ம் இடம், அமெரிக்கன் கல்லுாரி செல்வேந்திரன் 2ம் இடம், குண்டு எறிதலில் அரபிந்தோ மீரா பள்ளி கவுதம் முதலிடம், நின்றபடி குண்டு எறிதலில் மாதேஸ்வரன் முதலிடம், எம்.ஆர். பிரிவு குண்டு எறிதலில் சங்கர் சத்யா 2ம் இடம் பெற்றனர். ஒற்றையர் ஆடவர் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆரோக்கிய மைக்கேல் ராஜ் 3ம் இடம், எறிபந்து மகளிர் போட்டியில் அன்பகம் பள்ளி முதலிடம், ஆடவர் பிரிவில் பெத்சான் பள்ளி 2ம் இடம் பெற்றனர்.
அரசு ஊழியர்களுக்கான மகளிர் பாட்மின்டன் இரட்டையர் பிரிவில் ஓ.சி.பி.எம்., பள்ளி ஆசிரியை பெரிஸ், இன்ஸ்பெக்டர் ஹேமா 2ம் இடம் பெற்றனர்.
மேலும்
-
'குட்கா' பறிமுதல்
-
துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணனுடன் புதுச்சேரி பல்கலை., துணைவேந்தர் சந்திப்பு
-
காவல் உதவி செயலி பதிவிறக்கம் செய்தோர் 13.35 லட்சம் பேர்; பயன்படுத்துவோர் 8.45 லட்சம் பேர்
-
ஜேஎன்யு மாணவர் தேர்தல்: இடதுசாரி மாணவர் அமைப்பு வெற்றி
-
ரத்தத்தில் சர்க்கரை அளவை எளிதாக அறிய சென்னை ஐ.ஐ.டி.,யில் புதிய கருவி உருவாக்கம்
-
தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு