சின்னசேலம் ஒன்றிய நியமன கவுன்சிலருக்கு ஆணை வழங்கல்
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் பி.டி.ஓ., அலுவலகத்தில் நியமன அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவருக்கு ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
சின்னசேலம் ஒன்றியத்தில் உள்ள 50 ஊராட்சியிலும், தலா ஒருவர் வீதம் மொத்தம் 50 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் ஒரு ஒன்றிய உறுப்பினர் பதவியிடத்திற்கு மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினராக தேர்வு செய்ய கடந்த ஜூலை மாதம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலினை செய்து, அனைத்து பதவியிடங்களுக்கும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு, ஆணை வழங்கப்பட்டது.
சின்னசேலம் பி.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி, நியமன ஒன்றிய உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட தாகம்தீர்த்தாபுரம் ஊராட்சி ராமசாமி என்பவருக்கு ஆணை வழங்கினார்.
பி.டி.ஓ., சவரிராஜ், துணை பி.டி.ஓ., பன்னீர்செல்வம், தி.மு.க., ஒன்றிய துணை செயலாளர் சோளமுத்து, மாவட்ட பிரதிநிதி பெரியசாமி, கிளை செயலாளர் ஆறுமுகம், பழனிவேல், நிர்வாககிகள் அன்பரசு, ரமேஷ் மற்றும் பலர் உடனிருந்தனர்.
மேலும்
-
நிதிஷ் குமார் ஆட்சி முடிவுக்கு வந்து விட்டது; பிரசாந்த் கிஷோர்
-
101வது பிறந்தநாளை கொண்டாடிய திருப்பூர் மூதாட்டி: 7 தலைமுறை உறவுகளுடன் உற்சாக சந்திப்பு
-
கடல்சார் சக்தியாக திகழும் இந்தியா; முப்படை தளபதி பெருமிதம்
-
டீக்கடைகள், தெருமுனைகளில் எஸ்.ஐ.ஆர். விண்ணப்பம் விநியோகம்; 8 அதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்
-
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ஆம் ஆத்மி எம்எல்ஏ ஆஸி.,க்கு தப்பி ஒட்டம்
-
விஜய் மனிதாபிமானம் கொண்டவர்; நாங்கள் அது இல்லாதவர்களா: கேட்கிறார் துரைமுருகன்