விஜய் மனிதாபிமானம் கொண்டவர்; நாங்கள் அது இல்லாதவர்களா: கேட்கிறார் துரைமுருகன்

9


வேலூர்: கரூரில் 41 பேர் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்த அவர் (விஜய்) ரொம்ப மனிதாபிமானமிக்கவர்; நாங்கள் மனிதாபிமானம் இல்லாதவர்களா? என அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.


வேலூரில் நிருபர்கள் சந்திப்பில், கேள்விகளுக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார். அதன் விவரம் பின்வருமாறு:


நிருபர்: கொடநாடு விவகாரத்தில் என்ன பூச்சாண்டி காட்டினாலும் நான் பயப்படமாட்டேன் என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கூறியுள்ளாரே?

துரைமுருகன் பதில்: அவருடைய நிலைமையை அவர் தெரிவிக்கிறார். ஆனால் சட்டம் என்ன சொல்கிறதோ அதை சர்க்கார் செய்யும்.


கேள்வி: உச்சபட்ச அதிகாரம் மயக்கத்தில் மனிதாபிமானம் மாண்பு இல்லாமல், சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் எதிராக பேசுகிறார் என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளாரே?

துரைமுருகன் பதில்: கரூரில் 41 பேர் சாவதற்கு காரணமாக இருந்துவிட்டு பாதிக்கப்பட்டவர்களின் ஒரு வீட்டிற்கும் ஆறுதல் சொல்லாமல், பார்க்காமல் இருக்கிற அவர் (விஜய்) ரொம்ப மனிதாபிமானம் உள்ளவர். நாங்கள் மனிதாபிமானம் இல்லாதவர்கள், போங்க சார் நீங்கள்?


கேள்வி: 2026ம் தேர்தலில் திமுகவின் நாள்கள் எண்ணப்பட்டுள்ளது என பாஜ மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளாரே?

துரைமுருகன் பதில்: அவர் பாவம், எதையோ சொல்வார். நல்ல மனிதர், அங்கு சொல்லிக் கொடுப்பதை சொல்லிவிடுவார் அவ்வளவுதான்.



நிருபர்: எம்ஜிஆர் காலத்தில் இருந்தே செங்கோட்டையன் அரசியலில் இருக்கிறார், தற்போது செங்கோட்டையனை கட்சியிலிருந்து இபிஎஸ் அதிரடியாக நீக்கி இருக்கிறார்?




துரைமுருகன் பதில்: அது அவர்கள் கட்சி விவகாரம். செங்கோட்டையன் எம்ஜிஆர் காலத்திலிருந்து இருப்பவர் தான். இல்லை என்று சொல்லவில்லை. ஏன் இப்படி ஒரு முடிவு எடுத்தார் என்பது அவருக்கு தான் தெரியும்.



நிருபர்: டில்லிக்குச் சென்ற செங்கோட்டையன் நான் யாரையும் சென்று சந்திக்கவில்லை என்று அன்று கூறினார். கட்சியை விட்டு நீக்கிய உடன் பாஜ தன்னை அழைத்து பேசினார்கள் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளாரே?


துரைமுருகன் பதில்: உண்மை வெளிவந்து விட்டது. இவ்வளவுதான்.

Advertisement