நவம்பர் 12ல் 12 மாவட்டங்கள், நவ., 13ல் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

1


சென்னை: தமிழகத்தில் வரும் நவம்பர் 12ம் தேதி 12 மாவட்டங்களிலும், நவம்பர் 13ம் தேதி 8 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.



இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.


அதேபோல், தமிழக பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று (நவ., 09) கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நவம்பர் 12ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* நீலகிரி

* கோவை

* திருப்பூர்

* தேனி

* தஞ்சாவூர்

* புதுக்கோட்டை

* விருதுநகர்

* ராமநாதபுரம்

* தென்காசி

* தூத்துக்குடி

* திருநெல்வேலி

* கன்னியாகுமரி

நவம்பர் 13ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* நீலகிரி

* கோவை

* திண்டுக்கல்

* தேனி

* தென்காசி

* தூத்துக்குடி

* திருநெல்வேலி

* கன்னியாகுமரி

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement