நாங்கள் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு: கார்கேவுக்கு மோகன் பகவத் பதிலடி
பெங்களூரு: நாங்கள் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை தடை செய்யப்பட வேண்டும் என்று கூறியதை அடுத்து, மோகன் பகவத் பதிலடி கொடுத்துள்ளார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று நான் வெளிப்படையாகவே கூறுகிறேன் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவரது மகனும் கர்நாடக அமைச்சருமான பிரியங்க் கார்கே அரசு நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் ஆர்.எஸ்.எஸ் நடவடிக்கைகளைத் தடை செய்யக் கோரினார். ஆர்.எஸ்.எஸ்ஸின் பதிவு எண் மற்றும் அவர்களின் நிதி ஆதாரத்தைக் கூட அவர் கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில், பதிவு செய்யப்படாமல் செயல்படுவதற்காக ஆர்எஸ்எஸ்ஸை விமர்சிக்கும் காங்கிரஸ் தலைவர்களுக்கு அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் பதிலடி கொடுத்து இருக்கிறார். அவர் பேசியதாவது: ஆர்எஸ்எஸ் தனிநபர்களின் அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பு 1925ல் நிறுவப்பட்டது. எனவே நாங்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தில் பதிவு செய்திருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?
சுதந்திரத்திற்குப் பிறகு, இந்திய அரசு பதிவை கட்டாயமாக்கவில்லை. நாங்கள் தனிநபர்களின் அமைப்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளோம், மேலும் நாங்கள் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு. வருமான வரித் துறையும் நீதிமன்றங்களும் ஆர்எஸ்எஸ்ஸை தனிநபர்களின் அமைப்பாகக் குறிப்பிட்டுள்ளன. மேலும் வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
நாங்கள் மூன்று முறை தடை செய்யப்பட்டோம். எனவே அரசாங்கம் எங்களை அங்கீகரித்துள்ளது. பதிவு செய்யப்படாதத்தற்கு பல விஷயங்கள் உள்ளன. ஹிந்து தர்மம் கூட பதிவு செய்யப்படவில்லை. ஆர்.எஸ்.எஸ்ஸில் காவி கொடி ஒரு குருவாகக் கருதப்பட்டாலும், இந்திய மூவர்ண கொடி மீது மிகுந்த மரியாதை வைத்து இருக்கிறோம். இவ்வாறு மோகன் பகவத் பேசினார்.
பாவப்பட்டவனிடன் எல்லாம் எல்லா வரி என்ற பெயரில் கோவணத்தை உருவவேண்டியது, பிரிவினையை,வன்முறையை, தீவிரவாததை கற்றுத்தரும் அமைப்புக்கு வருமான வரிவிலக்கு.. நாடு வெளங்கிரும்....
The Congress party have been asked to desolve after independence by Gandhi ji..
the so called named after Gandhi would respect him by implementing it?
சுதந்திரம் அடைந்த பின்னர் காந்தி என்ன சொன்னார் ???? சுதந்திரம் வாங்கிக்கொடுத்த கட்சி என்று சொல்லிச்சொல்லியே மக்களிடம் அக்கட்சி தொடர்ந்து ஒட்டு வாங்கிவிடும் என்று காந்தி எதிர்பார்த்தாரோ ???? அதை ஏன் காங்கிரஸ் செய்யவில்லை ????
கருப்பு சிவப்பு நீலம் நிறத்திற்கு காவி நிறத்தை கண்டாலே எரிச்சல் தான் வருகிறது. ஏனென்றால் காவி ஒழுக்கம் மற்றும் தர்மத்தை போதிக்கிறது
ஆர் எஸ் எஸ் அமைப்புதான் இந்துக்களுக்கு இருக்கும் ஒரே அமைப்பு. அதை ஏன் தடை செய்ய வேண்டும். சிறுபான்மையினருக்கு, பல கட்சிகள், பதிவு செய்யாத, செய்த அமைப்புகள் உள்ளனவே . அதை தடை செய்ய சொல்லி யாரும் கேக்க வில்லை.
இது வரை எவ்வளவு வருமான வரி கட்டி உள்ளீர்கள்
அதைப் பற்றி செய்தியில் உள்ளது.
திமுகவை விட குறைவான வரி கட்டி உள்ளது ஞான்சூன்யம்
அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு அதன் உறுப்பினர்களுக்கு ஏன் ID கார்டு கொடுப்பதில்லை கலவரம் செய்து மாட்டி கொண்டால் அகப்பட்டு கொள்ளுவோம் என்கிற பயத்தாலா, சரி அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு இதை ஏன் REGD செய்யவில்லை எல்லாமே மறைமுகமா உங்கள் நடவடிக்கையை ஏன்
அடையாள அட்டை உள்ளது . தெரியாமல் எழுதுவது தவறு.
உங்களுக்கு ஹிந்து வாழ்வியல் முறையில் நம்பிக்கை இருந்தால் நீங்களும் அற்ற எஸ் எஸ் சின் ஷாகாக்களில் கலந்து கொள்ளலாம். உங்கள் மதம் என்ன ஜாதி என்ன என்றுயாரும் உங்களைக்கேட்க மாட்டார்கள் . முளிம்களும் கிறிஸ்தவர்களும் கூட கலந்து கொள்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா சினு ஜோசப் என்ற அதிகாரியின் ஆர் எஸ் எஸ் பற்றிய விடீயோவைப்பாருங்கள் , தெளிவு கிடைக்கும்.
ஆனால் உங்களை பலமுறை தடை செய்த்தவர் தான் வல்லபபாய் படேல் மறவாதேர்
அடிமைக்கும் rss க்கும் என்ன சம்பந்தம்...வந்துட்டான் வாழ்நாள் kothadimai
அயோக்கிய கொத்தடிமைமேலும்
-
நிதிஷ் குமார் ஆட்சி முடிவுக்கு வந்து விட்டது; பிரசாந்த் கிஷோர்
-
101வது பிறந்தநாளை கொண்டாடிய திருப்பூர் மூதாட்டி: 7 தலைமுறை உறவுகளுடன் உற்சாக சந்திப்பு
-
கடல்சார் சக்தியாக திகழும் இந்தியா; முப்படை தளபதி பெருமிதம்
-
டீக்கடைகள், தெருமுனைகளில் எஸ்.ஐ.ஆர். விண்ணப்பம் விநியோகம்; 8 அதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்
-
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ஆம் ஆத்மி எம்எல்ஏ ஆஸி.,க்கு தப்பி ஒட்டம்
-
விஜய் மனிதாபிமானம் கொண்டவர்; நாங்கள் அது இல்லாதவர்களா: கேட்கிறார் துரைமுருகன்