அத்தியாவசிய பொருட்களை மக்களிடம் சேர்க்கும் பணியில் திமுக அரசு தோல்வி; இபிஎஸ் காட்டம்
சென்னை: நெல் கொள்முதலில் துவங்கி, கோதுமை விநியோகம் வரை அத்தியாவசிய பொருட்களை மக்களிடம் சேர்க்கும் பணியில் கூட திமுக அரசு தோல்வி என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் குற்றம் சாட்டி உள்ளார்.
அவரது அறிக்கை: தமிழகத்தில் உள்ள 12,753 ரேஷன் கடைகளில் கோதுமை இல்லை என்று செய்திகள் வருகின்றன. இம்மாத்திற்கு 8,722 டன் கோதுமையை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தும், அதை முறையாக ரேஷன் கடைகளுக்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசு விநியோகம் செய்யவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே துவரம் பருப்பு, பாமாயில் தட்டுப்பாடு ஏற்பட்ட போதே, இந்த அரசை எச்சரித்தும், மிகுந்த மெத்தனப் போக்குடன் தான் செயல்பட்டது. திமுக ஆட்சியில் மற்ற துறைகளைக் காட்டிலும், நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறது போலும்.
நெல் கொள்முதல் துவங்கி, கோதுமை விநியோகம் வரை அத்தியாவசிய பொருட்களை மக்களிடம் சேர்க்கும் பணியில் கூட தோல்வி அடைந்துள்ள திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். உடனடியாக கோதுமை ரேஷன் கடைகளுக்கு சென்று சேர்வதை உறுதி செய்யுமாறு திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு இபிஎஸ் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (5)
திகழ்ஓவியன் - AJAX ONTARIO,இந்தியா
09 நவ,2025 - 14:42 Report Abuse
செங்கோட்டியன் செய்யும் வேலை பார்த்தால் உங்களிடம் இரட்டை இல்லை இருக்குமா இல்லை நீர் பொதுச்செயலாளர் ஆக இருப்பீரா என்னவோ டெல்லியில் உல் வேலை நடக்குது என்கிறார்கள் 0
0
vivek - ,
09 நவ,2025 - 16:40Report Abuse
அத்யாவசிய பொருளான டாஸ்மாக் தாராளமாக கிடைக்கிறது 0
0
Reply
திகழ்ஓவியன் - AJAX ONTARIO,இந்தியா
09 நவ,2025 - 14:41 Report Abuse
நேற்று வந்த அரசியல் கட்சி உங்கள் கட்சி லிஸ்டில் இல்லை என்று சொல்லுகிறார் அவரை ஒரு பிடி பிடியுங்கள் 0
0
Reply
திகழ்ஓவியன் - AJAX ONTARIO,இந்தியா
09 நவ,2025 - 14:40 Report Abuse
தன்னுடைய கட்சிக்காரன் கிட்ட விஜய் கட்சி கோடி கொடுத்து அசிங்கப்பட்ட எடப்பாடி, செங்கோட்டியன் சொல்லுகிறார் 0
0
Reply
Durai Kuppusami - chennai,இந்தியா
09 நவ,2025 - 14:35 Report Abuse
ஆம் முற்றிலும் உண்மை 0
0
Reply
மேலும்
-
நிதிஷ் குமார் ஆட்சி முடிவுக்கு வந்து விட்டது; பிரசாந்த் கிஷோர்
-
101வது பிறந்தநாளை கொண்டாடிய திருப்பூர் மூதாட்டி: 7 தலைமுறை உறவுகளுடன் உற்சாக சந்திப்பு
-
கடல்சார் சக்தியாக திகழும் இந்தியா; முப்படை தளபதி பெருமிதம்
-
டீக்கடைகள், தெருமுனைகளில் எஸ்.ஐ.ஆர். விண்ணப்பம் விநியோகம்; 8 அதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்
-
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ஆம் ஆத்மி எம்எல்ஏ ஆஸி.,க்கு தப்பி ஒட்டம்
-
விஜய் மனிதாபிமானம் கொண்டவர்; நாங்கள் அது இல்லாதவர்களா: கேட்கிறார் துரைமுருகன்
Advertisement
Advertisement