சென்னையில் மாநகராட்சி கவுன்சிலர் அலுவலகத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு

12


சென்னை: சென்னை மாநகராட்சி கவுன்சிலர் அலுவலகத்தில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


சென்னை கண்ணகி நகர் 8வது குறுக்குத் தெருவில் மாநகராட்சி அலுவலகம் உள்ளது. இங்கு வார்டு கவுன்சிலர் அலுவலகம், இ-சேவை மையம் உள்ளிட்டவை அமைந்துள்ளன. இந்த வார்டு கவுன்சிலராக அதிமுகவை சேர்ந்த அஸ்வினி கருணா உள்ளார்.

இந்நிலையில், இன்று மாலை டூவிலரில் வந்த இருவர் அலுவலகத்தில் கவுன்சிலர் உள்ளாரா எனக்கேட்டு நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பியோடினர். இதில், அங்கிருந்த புகைப்படங்கள் மற்றும் பொருட்கள் சேதம் அடைந்தன. வெடிகுண்டு வீசியதும் அங்கிருந்த மக்கள் அச்சத்துடன் வெளியேறினர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement