கோயில் தெப்பக்குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் முன்புள்ள எழில் மிகு தெப்பக்குளத்தில் மீன்கள் இறந்து மிதப்பதால் துர் நாற்றம் வீசுகிறது.

திருவாடானையில் ராமநாதபுரம் தேவஸ்தானத்திற்கு சொந்தமான ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் உள்ளது.

இக்கோயில் முன்பு அழகிய தெப்பக்குளம் உள்ளது. மக்கள் குளிக்க பயன்படுத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாக இங்கு மீன்கள் இறந்து மிதக்கின்றன.

இதனால் அந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. அதிக வெப்பத்தால் ஆக்ஸிஜன் அளவு குறைந்து மீன்கள் இறந்திருக்கலாம்.

அப்பகுதி மக்கள் கூறுகையில் குளிக்க முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது. மீன்களை அகற்றி நீரை சுத்தப் படுத்த சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Advertisement