த.வெ.க., ஆர்ப்பாட்டத்தில் திரண்ட மகளிர்: அதிர்ச்சியில் ஆளுங்கட்சி
சென்னை: த.வெ.க., ஆர்ப்பாட்டத்தில், ஆண்களை விட மகளிர் அதிகளவில் திரண்டதால், ஆளுங்கட்சி தலைமை கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.
தி.மு.க., தேர்தல் வாக்குறுதிப்படி, மகளிருக்கு அரசு பஸ்களில் இலவச பயணம் அனுமதிக்கப்பட்டு வருகிறது. மேலும், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், 1.25 கோடி பேருக்கு மாதம் 1,000 ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.
கூடுதலாக இத்திட்டத் தில் மகளிரை சேர்ப்பதற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. இதற்காக, 40 லட்சம் பேர் வரை விண்ணப்பம் செய்துள்ளனர். இவர்களில், தகுதியானவர்களுக்கு டிசம்பர் 15 முதல் உரிமைத்தொகை வழங்கப்படவுள்ளது. இது மட்டுமின்றி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து, கல்லுாரிகளுக்குச் சென்றுள்ள மாணவியருக்கு மாதம், 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
ஊரக வளர்ச்சி துறை வாயிலாக, மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் வங்கி கடன்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதன் வாயிலாக, 2026 சட்டசபை தேர்தலில், மகளிர் ஓட்டுகளை முழுமையாக கைப்பற்றி விடலாம் என, தி.மு.க., தலைமை கணக்கு போட்டு உள்ளது.
ஆனால், நடிகர் விஜய் துவங்கியுள்ள த.வெ.க.,வால், இந்த முயற்சியில் பின்னடைவு ஏற்படுமோ என்ற அச்சம், தி.மு.க., தலைமைக்கு திடீரென ஏற்பட்டுள்ளது. கடந்த 16ம் தேதி, எஸ்.ஐ.ஆர்., எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிக்கு எதிராக, மாநிலம் முழுதும் த.வெ.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மாவட்டங்களில் நடந்த ஆர்ப்பாட்டங்களில், ஆண்களை விட மகளிர் அதிகளவில் பங்கேற்று, ஆளுங்கட்சிக்கு அதிர்ச்சி அளித்துள்ளனர். மகளிர் அதிகளவில் திரண்ட விபரத்தை, உளவுத் துறையினர் அரசுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதனால், மகளிருக்கு அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள், ஆளுங்கட்சியின் வெற்றிக்கு கைகொடுக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மகளிரை கவரும் வகையில், கூடுதல் திட்டங்களை செயல்படுத்த வேண்டிய நிர்ப்பந்தமும் அரசுக்கு ஏற்பட்டுள்ளதாக, தி.மு.க., தரப்பிலேயே கூறுகின்றனர்.
இவ்ளோ பேர் இருந்தும் ஒரு தடங்கல் கூட சென்னை கோட்டையில் நடக்க வில்லையா?
விஜய் அவர்கள் மாதர்குலத்தை மரியாதையுடன் நடத்துவதே காரணம். பொன்முடி போன்றவர்கள் இழிவாக பேசுவது, மாதர்குலத்தை பாதித்துள்ளது. இது நிச்சயமாக தேர்தலில் பிரதிபலிக்கும்.மேலும்
-
கஞ்சா விற்ற சிறுவன் உட்பட 2 பேர் கைது
-
மயிலம் பத்திர பதிவு அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ. 2 லட்சம் சிக்கியது
-
விபத்து இழப்பீடு தராததால் திண்டிவனத்தில் அரசு பஸ் ஜப்தி
-
பெண் தபால் ஊழியரிடம் செயின் பறித்தவர் கைது
-
ஒன்றிய துணை சேர்மன் ராஜினாமா: விழுப்புரம் தி.மு.க.,வில் பரபரப்பு
-
துாங்கிய பெண்ணிடம் 5 சவரன் செயின் பறிப்பு