ஊராட்சி மன்ற ஊழியர் மாரடைப்பால் உயிரிழப்பு
ப.வேலுார், ப.வேலுார் அருகே, நெட்டையாம்பாளையத்தை சேர்ந்தவர் செல்வம், 58; இவர், கொந்தளம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் திறந்துவிடும் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். சில நாட்களுக்கு முன், தண்ணீர் திறந்து விடும்போது நெஞ்சுவலி ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மீண்டும் செல்வத்துக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது.
ப.வேலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், முதலுதவி செய்து கொண்டிருக்கும் போது செல்வம் இறந்தார். இதுகுறித்து ப.வேலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement