பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி

நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை அரசு ஆண்கள் பள்ளியில், போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. தலைமை ஆசிரியர் முத்துநல்லியப்பன் தலைமை வகித்தார். கூட்டத்தில், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் என, 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


முன்னதாக, போதைப்பொருள் விழிப்புணர்வு குறித்து நாமகிரிப்பேட்டை எஸ்.ஐ., சீனிவாசன் விளக்கி கூறினார். தொடர்ந்து நாமகிரிப்பேட்டை கண்காணிப்பு அலுவலரும், பள்ளி துணை ஆய்வாளருமான பெரியசாமி தலைமையில், மாணவர்கள் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர். மேலும், ஆசிரியர்கள், செயலியை பதிவிறக்கம் செய்து, அதன் மூலம் எவ்வாறு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, பெரியசாமி
விளக்கினார்.
மாணவ, மாணவியரின் உடைமைகள், பைகளை தினந்தோறும் கண்காணித்து சோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டது. நேற்று மாணவர்கள், ஆசிரியர்கள் என மொத்தம், 500 பேர் உறுதிமொழி ஏற்றனர்.

Advertisement