கனிமங்களை வெட்டிய வாகனங்கள் பறிமுதல்

ராசிபுரம், ராசிபுரம் அடுத்த சாணார்புதுார் பகுதியை சேர்ந்தவர் வரதராஜன் மகன் மாயகண்ணன், 45; இவரது தோட்டத்தில் வெடிவைத்து, பாறை கற்களை வெட்டி எடுத்து விற்பனை செய்வதாக, நாமக்கல் கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.



அதனடிப்படையில், கனிம வளத்துறை அதிகாரிகள் நேரில் சென்று பார்த்தபோது, கற்களை வெட்டிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கனிமவளத்துறை அதிகாரிகள் ராசிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் அங்கிருந்த, இரண்டு டிராக்டருடன் சேர்ந்த கம்ப்ரசர், ஹிட்டாச்சி வண்டி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், கனிமவளத்துறை அதிகாரிகள் கொடுத்த புகார்படி, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement