ப.பாளையம் அரசு பள்ளியில் தேசிய மாணவர் படை துவக்கம்
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், தேசிய மாணவர் படை(என்.சி.சி.,) துவக்க விழா, சேலம்-11 (டி.என்.,) சிக்னல் கம்பெனியின் என்.சி.சி., இன் கமாண்டிங் ஆபீசர் கர்னல் சூரஜ் நாயர் தலைமையில், நேற்று நடந்தது.
இவர், மாணவர்களிடையே இந்திய ராணுவத்தின் முக்கியத்துவம் குறித்தும், ராணுவத்தில் உள்ள வாய்ப்புகள் குறித்தும் தெளிவாக எடுத்துக்கூறினார். அதை தொடர்ந்து, பள்ளியில் என்.சி.சி., அலுவலகம் திறந்து வைத்தார். இதையடுத்து, 50 என்.சி.சி., மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்க்கொண்டனர். பின், மாணவர்களுக்கு, கர்னல் நினைவு பரிசு வழங்கினார்.
நிகழ்ச்சியில், சிக்னல் கம்பெனியின் சுபேதார் சுபாஷ், தலைமை ஆசிரியர் உமா மகேஸ்வரன், உதவி தலைமை ஆசிரியர் முருகேசன், என்.சி.சி., அலுவலர் கார்த்தி மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து
கொண்டனர்.