மோகனுார் வழியாக கூடுதல் பஸ் இயக்க வேண்டுகோள்

கரூர், நவாங்கல்-மோகனுார் வழித்தடத்தில், கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர் மாவட்ட எல்லையில், வாங்கல் காவிரியாற்றுக்கு அக்கரையில் நாமக்கல் மாவட்ட மோகனுார் உள்ளது. இங்கிருந்து வேலைக்காக, தினமும் நுாற்றுக்கணக்கானோர் கரூர் வந்து செல்கின்றனர். வாங்கல்-மோகனுார் மேம்பாலம் கட்டப்பட்டு, பல ஆண்டுகளாகியும் அரசு பஸ்கள் குறைந்த அளவில் இயக்கப்பட்டு வருகின்றன. காலை, மாலை நேரங்களில் போதுமான பஸ்கள் இயக்கப்படாதால், பயணிகள் திண்டாடுகின்றனர். பஸ் கிடைக்காமல் நாமக்கல் வந்து செல்வதால், குறித்த நேரத்திற்கு வந்து செல்ல முடியவில்லை. எனவே, வேலைக்கு சென்று வருவோரின் வசதிக்காக, இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கையாக உள்ளது.

Advertisement