வேளாண்மை துறை சார்பில் ஒரு நாள் பயிற்சி முகாம்



கரூர், நகரூர் மாவட்ட வேளாண்மை துறை சார்பில், அட்மா திட்டத்தின் கீழ், தென்னிலை அம்மாபட்டியில், விவசாயிகளுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் நேற்று நடந்தது.


அதில், பட்டு புழு வளர்ச்சி முறைகள், மல்பெரி செடிகள் வளர்ப்பு முறை, நுண்ணீர் பாசனம், சோளம், கம்பு செயல் விளக்க திடல் அமைக்கும் முறை, உழவன் செயலி விளக்கம் உள்ளிட்ட, விவசாய துறை சார்ந்த நலத்திட்டம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்ட து. முகாமில், மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சிங்காரம், உதவி இயக்குனர் பிரியா, உதவி அலுவலர் வெற்றிவேல், பட்டு வளர்ச்சி ஆய்வாளர் மோகன், தொழில்நுட்ப மேலாளர்கள் கார்த்திக், அமர்நாத் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement