கோல்கட்டாவில் வன்முறை; மெஸ்ஸி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது
கோல்கட்டா: சால்ட் லேக் மைதானத்தில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து, லியோனல் மெஸ்ஸியின் இந்திய பயண ஏற்பாட்டாளர் சதத்ரு தத்தாவை கோல்கட்டா போலீசார் கைது செய்தனர்.
அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி 14 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (டிச. 13)இந்தியா வந்தார். கோல்கட்டாவில் சால்ட் லேக் மைதானத்துக்கு காலை 11.15 மணியளவில் மெஸ்ஸி சென்றார். மைதானத்திற்கு வந்த மெஸ்ஸி, ரசிகர்களின் அடாத செயலால் சிறிது நேரத்திலேயே அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் மெஸ்ஸியை சுற்றி இருந்ததால் மைதானத்தில் இருந்த ரசிகர்களால் மெஸ்ஸியை பார்க்க முடியவில்லை. சால்ட் லேக் மைதானத்தில் குழப்பம் ஏற்பட்டது.
டிக்கெட்டுகளை திரும்பப் பெறுமாறு ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர். மைதானத்தில் இருந்த அனைத்து பொருட்களையும் ரசிகர்கள் அடித்து நொறுக்கினர். தகுந்த பாதுகாப்பு ஏற்பாடு வசதிகள் செய்யாததற்கு மெஸ்ஸி ரசிகர்களிடம் முதல்வர் மம்தா மன்னிப்பு கோரியுள்ளார்.
இந்நிலையில், மெஸ்ஸியின் இந்திய பயண நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சதத்ரு தத்தாவை கோல்கட்டா போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீசார் கூறியதாவது:
நாங்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரிடம் விசாரணை நடத்தினோம்.
விற்கப்பட்ட டிக்கெட்டுகளுக்கான பணம் திரும்ப வழங்கப்படும் என்று அவர் எழுத்துப்பூர்வமாகக் கூறியுள்ளார். நிலைமை இப்போது கட்டுக்குள் உள்ளது. முக்கிய ஏற்பாட்டாளரை நாங்கள் கைது செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மிக முக்கியமான நபர் வருகை மூலம் வசூல் செய்வது ஒரு விளையாட்டாக மாறிவிட்டது