'வந்தே பாரத்' ரயில்களில் உள்ளூர் உணவு

சென்னை: 'வந்தே பாரத்' ரயில்களில் உள்ளூர் உணவுகள் வழங்க, அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டுள்ளார்.

அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:

'வந்தே பாரத்' ரயில்களில், உள்ளூர் உணவுகள் வழங்க வேண்டும். உள்ளூர் உணவு வகைகளை அறிமுகப்படுத்துவது, பயணியரின் அனுபவத்தை மேம்படுத்தும்.

இதைத் தொடர்ந்து, படிப்படியாக அனைத்து ரயில்களிலும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும்.

போலி அடையாள அட்டைகள் வாயிலாக, டிக்கெட் முன்பதிவு செய்வதை தடுக்க, ரயில்வே எடுத்து வரும் நடவடிக்கையால் பலன் கிடைத்துள்ளது. போலி அடையாள அட்டையை பயன்படுத்தி, முன்பதிவு செய்வதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடரும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement