இதே நாளில் அன்று
டிசம்பர் 14:
துாத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில், எட்டப்ப பிள்ளை - முத்தம்மாள் தம்பதியின் மகனாக, 1879, ஜூலை 27ல் பிறந்தவர், சத்தி யானந்த சோமசுந்தரம்.
எட்டயபுரம் அரண்மனை பராமரிப்பில் வளர்ந்த இவரும், அங்கு பணியாற்றிய சின்னசாமி அய்யரின் மகன் சுப்பிரமணியனும் நண்பர்கள். அரண்மனைக்கு வந்த இலங்கை புலவர் ஒருவர், கல்வியிலும், கவி புனைவதிலும் வல்லவர்களான இவர்களுக்கு, கடைசி வரியையும், தலைப்பையும் தந்து பாடல் எழுத சொன்னார்.
அதில் இருவரும் வென்றதால், 'பாரதி' எனும் பட்டத்தை வழங்கினார். இவர் சோமசுந்தர பாரதி, அவர் சுப்பிரமணிய பாரதியானார்.
இவர், நெல்லை சி.எம்.எஸ்., பள்ளி, சென்னை கிறிஸ்துவ மற்றும் சட்ட கல்லுாரிகளில் படித்து வழக்கறிஞரானார். வ.உ.சி.,யின் நண்பரான இவர், சுதேசி கப்பல் கம்பெனியின் நிர்வாக பொறுப்பாளராக இருந்தார். முன்னாள் முதல்வர் அண்ணாதுரை, கம்பராமாயணத்தை எரிக்க முயன்ற போது, அதற்கு எதிராக முழங்கினார்.
இவர், தன், 80வது வயதில், 1959ல், இதே நாளில் மறைந்தார்.
'நாவலர்' சோமசுந்தர பாரதி மறைந்த தினம் இன்று!
மேலும்
-
தமிழக சட்டசபை தேர்தல்; அதிமுகவில் விருப்ப மனு வினியோகம் தொடக்கம்
-
தமிழக தேர்தல் பாஜ பொறுப்பாளர்களாக மத்திய அமைச்சர்கள் 3 பேர் நியமனம்
-
திருப்பரங்குன்றம் தீப வழக்கு: 2வது நாளாக ஐகோர்ட் கிளையில் விசாரணை
-
பார்லிமென்டில் எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளி: இரு அவைகளும் ஒத்திவைப்பு
-
பார்லியில் எந்த விஷயம் குறித்தும் விவாதிக்க தயார்: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ திட்டவட்டம்
-
பிரபல ஹாலிவுட் இயக்குநர் ராப் ரெய்னர், அவரது மனைவி கத்தியால் குத்திக்கொலை