சில ஆயிரங்களை கொடுப்பதுதான் தி.மு.க.,வின் சமூக நீதியா: அன்புமணி

1

சென்னை: 'மதுவை காட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்து விட்டு, சில ஆயிரங்களை கொடுப்பதுதான் தி.மு.க.,வின் சமூக நீதியா' என, பா.ம.க., தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது அறிக்கை:

தமிழகத்தில் கூடுதலாக, 16 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக, பல கோடி ரூபாய் மக்களின் வரிப்பணத்தை வீணடித்து, மாபெரும் விளம்பர நாடகத்தை, தி.மு.க., அரசு அரங்கேற்றியுள்ளது.

தமிழகத்தில், பெண்களின் நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் நிலையில், அதை மறைப்பதற்காக, இத்தகைய பிரசார நாடகத்தை அரங்கேற்றி இருப்பது கண்டிக்கத் தக்கது. 1,000 ரூபாயைக் கொண்டு, 13 நாள்களுக்கான பால் செலவைக் கூட சமாளிக்க முடியாது.

ஆனால், மாதம் 1,000 ரூபாய் தருவதால், பெண்கள் முன்னேறி விட்டனர் என்று கூச்சமே இல்லாமல், மக்களின் காதுகளில் பூவை அல்ல, பூ மாலையையே சூட்ட, தி.மு.க., அரசு முயற்சிக்கிறது.

தி.மு.க., ஆட்சியில் ஆண்டுக்கு, 1.50 லட்சம் கோடி ரூபாய் மக்களின் வரிப்பணம் மது விற்பனை வாயிலாக கொள்ளை அடிக்கப்படுகிறது. அதன்படி பார்த்தால், ஒவ்வொரு குடும்பமும் ஆண்டுக்கு சராசரியாக, 66,000 ரூபாயை மதுவுக்காக செலவிடுகிறது. தமிழகத்தில், 75 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மது குடிப்பதாக வைத்துக் கொண்டால், அந்த குடும்பங்களில் இருந்து ஆண்டுக்கு, தலா 2 லட்சம் ரூபாய் பறிக்கப்படுகிறது.

மதுவைக்காட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்துவிட்டு, சில ஆயிரங்களை மட்டும் உதவித்தொகையாக வழங்குவது தான், தி.மு.க.,வின் சமூக நீதியா? மதுக்கடைகளை திறந்து வைத்து விட்டு, பெண்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவது, ஓட்டை வாளியில் தண்ணீரை பி டிப்பதற்கு சமம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தேர்தலில் தி.மு.க.,வை

அரசு ஊழியர்கள் தண்டிப்பர்

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர் களுக்கு அடுக்கடுக்கான துரோகங்களை, தி.மு.க., அரசு செய்து வருகிறது. 10 ஆண்டுகளாக ஆட்சிக்கு வர முடியாமல் தடுமாறிய தி.மு.க.,வை, அரசு ஊழியர்கள் தான் ஆட்சியில் அமர்த்தி னர்.ஆனால், அந்த நன்றி கொஞ்சமும் இல்லாமல், அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய அடிப்படை உரிமைகளைக் கூட வழங்க மறுக்கிறது. அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை, தி.மு.க., அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்; இல்லாவிட் டால், வரும் தேர்தலில் தி.மு.க.,வை வீ ட்டுக்கு அனுப்பி தண்டிப்பர். - அன்புமணி, தலைவர், பா.ம.க.,

Advertisement