திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம் 'டி - சர்ட்' அணிந்து விழிப்புணர்வு பிரசாரம்

18

மதுரை: திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணில் தீபம் ஏற்றக்கோரி, ஹிந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பினர், 'குன்றில் தீபம் ஏற்றுவோம்' என அச்சடித்த 'டி - சர்ட்' அணிந்து பிரசாரம் செய்து வருகின்றனர்.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணில், திருக்கார்த்திகையன்று தீபம் ஏற்ற உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது. அதை தமிழக அரசு ஏற்க மறுத்தது.

இதுதொடர்பான விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், தீபத்துாணில் தீபம் ஏற்ற, உள்ளூர் மக்கள், உயர் நீதிமன்ற அனுமதி பெற்று நேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.

Tamil News
வீடுதோறும் தீபம், கொடியேற்றி வழிபட்டு வருகின்றனர்.

அதேசமயம், ஹிந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பினரும் தீபம் ஏற்ற வலியுறுத்தி, பல வகைகளில் பிரசாரம் செய்து வருவது மக்களை ஈர்த்து வருகிறது.

ஹிந்து முன்னணியினர் கூறுகையில், 'திருப்பரங்குன்றம் மலையில், தீபத்துாணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டதற்கு மக்களிடையே எவ்வளவு ஆதரவு உள்ளது என, சமூக வலைதளத்தில் ஓட்டெடுப்பு நடத்தி வருகிறோம்.
Latest Tamil News
நாங்கள் எதிர்பார்த்ததைவிட ஆதரவு அதிகரித்து வருகிறது. தவிர, ஒவ்வொருவரும் 'குன்றில் தீபம் ஏற்றுவோம்' என அச்சிடப்பட்ட டி - சர்ட்டை அணிந்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
Latest Tamil News
'அதுபோல் வாட்ஸாப் ஸ்டேட்டஸிலும், டிஸ்ப்ளே பிக்சராகவும் 'அங்கேயே தீபம் ஏற்றுவோம்' என்ற வாசகத்துடன் கூடிய படத்தை வைத்துள்ளோம். இதை ஒவ்வொரு ஹிந்துவும் தாங்களாக முன்வந்து செய்தால், நிச்சயம் முருகன் அருளால் தீபம் ஏற்றும் கட்டாயத்திற்கு தி.மு.க., அரசு வரும்' என்றனர்.

Advertisement