பார்லிமென்டில் எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளி: லோக்சபா ஒத்திவைப்பு
புதுடில்லி: பார்லிமென்டில் லோக்சபாவில் எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் மதியம் 2 மணி வரை ஒத்திவைத்து ஓம் பிர்லா உத்தரவிட்டார்.
பார்லியில் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. எஸ்.ஐ.ஆர்., பணி, வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு உட்பட பல்வேறு விவாதங்களில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் இடையே அனல் பறக்கும் விவாதங்கள் நடந்து வருகின்றன. பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இந்த சூழலில் இன்று (டிச 12) காலை 11 மணிக்கு லோக்சபா கூடியது. அவை கூடியதும், காங்கிரஸ் பேரணியில் பிரதமர் மோடிக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டது குறித்து லோக்சபா எம்பி ராகுல், மூத்த தலைவர் சோனியா உள்ளிட்டோர் மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜூ, ஜே.பி.நட்டா பேசுகையில் தெரிவித்தனர்.
பின்னர் காங்கிரஸ் எம்பிக்கள் உட்பட எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் அவையில் கூச்சல், குழப்பம் நிலவியது. சபாநாயகர் ஓம்பிர்லா அமைதியாக இருக்குமாறு எம்பிக்களிடம் கேட்டு கொண்டார். ஆனால் தொடர்ந்து அமளி நீடித்ததால், அவையை 12 மணி வரை ஓம்பிர்லா ஒத்திவைத்தார்.
மீண்டும் அவை 12 மணிக்கு கூடியது எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல் ராஜ்யசபாவிலும் எதிர்க்கட்சி தலைவர் கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால், அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் மீண்டும் 12 மணிக்கு ராஜ்யசபா கூடி நடந்து வருகிறது. அவையை ராஜ்யசபா தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நடத்தி வருகிறார்.
டில்லியில் நல்ல குளிர். செரிமானம் ஆகவில்லை. வாக்கிங் போக முடியவில்லை. உடலுக்கு வேலை இல்லை. காலையில் சாப்பிட்ட வடகறியே செரிமானம் ஆகவில்லை என்று கத்தினார்கள். மதிய சாப்பாடும் செரிமானம் ஆகவில்லை போலும். கார்கே ஜியே களத்தில் இறங்கி விட்டார்.
தவெக தொண்டர்கள் பற்றி விமர்சிப்பவர்கள் அமளியில் ஈடுபடும் எதிர்க்கட்சி எம்பிக்கள் பற்றியும் விமர்சிப்பார்களா? இவர்களாவது இளவயசு தொண்டர்கள், பார்லிமென்டில் இருப்பவர்களோ எதிர்க்கட்சி எம்பிக்கள்.
காங்கிரஸ் முட்டாள்தனமாக அமளியில் ஈடு படுகிறது பாஜக இதை நன்கு பயன்படுத்திக் கொள்கிறது
Throw them out
இந்த ரவுடிகளை அவையை விட்டு நிரந்தரமாக நீக்கி விடுவது நாட்டுக்கு மிகவும் நல்லது.
வேண்டாம், இவர்களை இன்னும் பலஇந்தியர்கள் நீங்கள் ஆள்வதை ஒப்பு கொள்ள வேண்டும். அப்பபோதுதான் பாராளுமன்றம் அதிக கதறல் ல்லாமல் நடக்கும். மக்கள் புரிந்து கொள்ள இன்னும் நேரம் தேவை.
அமல்கள் செய்து நேரம் விரயம் ஆவதற்கான பாராளுமன்ற நிர்வாக செலவினை இப்படி அமளி செய்தவர்களிடமே வசூல் செய்வதுதான் சரியாக இருக்கும் பொதுமக்கள் தலையில் ஏன் இந்த வரியை சுமத்த வேண்டுமோ
மிகச்சிறந்த பாராளுமன்ற உறுப்பினர்களாக திகழ்ந்த மறைந்த திருமதி சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் அருண் ஜெட்லி பற்றி மிகத் தவறாக சித்தரித்து நேர்மையற்ற கருத்து எழுதும் திராவிட சம்பள விசவாசியே பொய் சொன்னாலும் பொருந்த சொல்லவும். மூத்த காங்கிரஸ் எம்.பிக்கள் எவரும் உங்களோட தவறான கருத்துகளுக்கு எதிர்ப்பு தான் செய்வார்கள். முதலில் பொய்யுரை சொல்வதை நிறுத்தவும். பிறகு உங்க இண்டி கூட்டணியினரின் முதிர்ச்சியற்ற எதிர்ப்பு செயல்களை நியாயப் படுத்த வேறு சாக்கு போக்கு சொல்லலாம். அடிப்படை மரியாதைகள் கூட தெரியாத விடியல் வெட்டிகள் நிறைய உலவுகின்றன, நாட்டை காப்பாற்று இறைவா
இது எப்படி இருக்கு
இந்திய அரசியல் இவளவு கீழ் இறங்கி வருவது, ஒரு எதிர்கட்சியால் நடக்கிறது.
ரொம்ப மோசம் , அருண்ஜெடலி சுஷ்மா சுவராஜ் செய்ததை அப்படியே இப்போ செய்கிறீர்களே நியாயமா , அடுக்குமா , அதுவும் உத்தம சீலர்கள் பீசப்பி க்கு எதிரா என்னவோ போங்கள் வினை விதைத்தவன் அறுத்தே தீருவான் அதுவும் மினாரிட்டி அரசு வேறு
ஆமாம் இந்துமத ஜென்ம விரோதி துண்டுசீட்டு வரும் தேர்தலில் விரட்டியடிப்போம்
அப்படியா, இரண்டு பேர் போட்ட கூச்சல 220 பேர்கள் போடுகிறார்களா? குறைச்சுடுவோம்.
420 என்று சொன்ன உங்களை 200 க்கு குறைச்சா மாதிரியா இப்போ MINORITY அரசுமேலும்
-
மத சர்ச்சையாக மாறிய மாணவர் சேர்க்கை விவகாரம்; ஜம்முவில் மருத்துவக் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து
-
சட்டத்திற்கு புறம்பான தீர்ப்பு: அமைச்சர் ரகுபதி விமர்சனம்
-
வட மாநிலங்களில் கடும் குளிர் நிலவும்; பஞ்சாப், ஹரியானா அதிகம் பாதிக்கும் என வானிலை மையம் கணிப்பு
-
அரசு கல்லுாரி மாணவர்களுக்கு புதிதாக 'லேப்டாப்' வழங்கல்
-
நலத்திட்ட உதவி
-
திறந்தநிலை மின்சாதன பெட்டிக்கு மூடி அமைப்பு