தமிழக தேர்தல் பாஜ பொறுப்பாளர்களாக மத்திய அமைச்சர்கள் 3 பேர் நியமனம்

20

புதுடில்லி: தமிழக பாஜ தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், இணை பொறுப்பாளர்களாக அர்ஜுன் ராம் மேக்வால், முரளிதர் மோஹோல் ஆகிய 3 பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.


தமிழகத்தில் சட்டசபை பதவிக்காலம், மே மாதம் நிறைவடைய உள்ளதால், இம்மாநிலங்களில் ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடத்தப்பட உள்ளது. தேர்தலுக்கு இன்னும் மூன்றரை மாதங்களே உள்ளதால், தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் களத்தில் இறங்கி உள்ளன. வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக, தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து, விருப்ப மனுக்கள் வாங்கும் பணியை துவக்கி உள்ளன.


இந்நிலையில் இன்று (டிச.,15) 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலையொட்டி 3 பேர் கொண்ட குழுவை பாஜ அமைத்து உள்ளது. பாஜக பொறுப்பாளர்களாக மத்திய அமைச்சர்கள் 3 பேர் களம் இறக்கப்பட்டு உள்ளனர். தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயலும், இணை பொறுப்பாளர்களாக அர்ஜுன் ராம் மேக்வால், முரளிதர் மோஹோல் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

யார் இந்த 3 பேர்?



Latest Tamil News

பியூஷ் கோயல்



மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராக பியூஷ் கோயல் பதவி வகித்து வருகிறார். இவர் மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பாஜ.,வின் தேசியப் பொருளாளராகவும் பதவி வகித்துள்ளார்.
Latest Tamil News

அர்ஜுன் ராம் மேக்வால்



மத்திய சட்ட மற்றும் நீதித்துறை அமைச்சராக அர்ஜுன் ராம் மேக்வால் உள்ளார். இவர் ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானேர் லோக்சபா தொகுதி எம்பி ஆவார். 2013ம் ஆண்டில் சிறந்த பார்லிமென்ட் உறுப்பினருக்கான விருதைப் பெற்றார். 2019ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை கனரக தொழில்கள் மற்றும் பொது நிறுவனங்கள் துறை இணையமைச்சராக பதவி வகித்துள்ளார்.
Latest Tamil News

முரளிதர் மொஹோல்



மத்திய கூட்டுறவு மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சராக முரளிதர் மொஹோல் பதவி வகித்து வருகிறார். பாஜவை சேர்ந்த இவர் கடந்த 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் புனே லோக்சபா தொகுதியில் முதல்முறையாக வெற்றி பெற்று எம்பி ஆனார். முதல்முறையாக எம்பி.,யாக தேர்வு செய்யப்பட்டாலும் மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இவர் புனேவின் மேயராகப் பணியாற்றி உள்ளார்.

Advertisement