கர்நாடக ஓட்டு திருட்டு வழக்கில் அதிரடி பா.ஜ.,வினர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
பெங்களூரு: கர்நாடகாவில், 2023 சட்டசபை தேர்தலில் நடந்த ஓட்டு திருட்டு குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்திய எஸ்.ஐ.டி., எனப்படும் சிறப்பு புலனாய்வு குழுவினர், 22,000 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
அதில், பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., சுபாஷ் குத்தேதார், அவரது மகன் உள்ளிட்டோரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், '2024 லோக்சபா தேர்தலில், காங்கிரசுக்கு வர வேண்டிய ஓட்டுகளை திருடி, பா.ஜ., ஆட்சிக்கு வந்தது' என, சில மாதங்களுக்கு முன் குற்றஞ்சாட்டினார்.
தொடர்ந்து, கர்நாடகாவில் 2023ல் நடந்த சட்டசபை தேர்தலில், ஆலந்த் சட்டசபை தொகுதியிலும் ஓட்டுகளை திருடி தன்னை தோற்கடிக்க பா.ஜ., முயற்சித்ததாக, காங்கிரசைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,வான பி.ஆர்.பாட்டீல் குற்றஞ்சாட்டினார்.
இதையடுத்து, முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்., அரசு, ஆலந்த் தொகுதியில் நடந்த ஓட்டு திருட்டு தொடர்பாக விசாரணை நடத்த சி.ஐ.டி., கூடுதல் டி.ஜி.பி.,யான பி.கே.சிங் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது. குழுவினரும் ஆலந்த் தொகுதியில் விசாரணை நடத்தினர்; பல இடங்களில் சோதனை நடத்தி ஆதாரங்களை திரட்டினர்.
விசாரணையை முடித்த எஸ்.ஐ.டி., அதிகாரிகள், 22,000 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை, பெங்களூரு நகரின், ஏ.சி.எம்.எம்., நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்தனர்.
அதில், ஆலந்த் தொகுதியின் பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., சுபாஷ் குத்தேதார், அவரது மகன் ஹர்ஷானந்தா குத்தேதார் உட்பட, ஏழு பேருக்கு ஓட்டு திருட்டில் தொடர்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
விமான எரிபொருள் ஏற்றுமதிக்கு உபரி எத்தனால் பயன்படும்
-
'இந்தியா இன்டர்நேஷனல்' பின்னலாடை கண்காட்சி டில்லியில் ஜனவரி 23ல் துவக்கம்
-
'பின்டெக் டவரில்' அலுவலகங்கள் ஒதுக்கீடு பெற முன்பதிவு துவக்கம்
-
ஆஸ்திரேலிய துப்பாக்கிச்சூடு: மடக்கி பிடித்தவருக்கு பாராட்டு
-
வர்த்தக துளிகள்
-
16/12/2025 வெளியீடு முட்காடுகளை ராஜபாட்டையாக்கும் 'தினமலர்'