திறந்தநிலை மின்சாதன பெட்டிக்கு மூடி அமைப்பு
பொன்னேரி: திறந்த நிலையில் இருந்த தெருவிளக்கு மின்சாதன பெட்டிக்கு, மின்வாரிய ஊழியர்கள் சார்பில் மூடி அமைக்கப்பட்டுள்ளது.
பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட வேண்பாக்கம் பகுதியில், அரசு துவக்கப்பள்ளி எதிரே, தெருவிளக்குகளை இயக்குவதற்கான மின்சாதன பெட்டி திறந்த நிலையில் இருந்தது. மாணவர்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவது குறித்து, இரண்டு நாட்களுக்கு முன், நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக, பொன்னேரி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் பாண்டியன் உத்தரவின்படி, மின்வாரிய ஊழியர்கள் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த மின்சாதன பெட்டி, நகராட்சி நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது என்பது தெரிந்தது. உடனே, நகராட்சி நிர்வாகத்திற்கு மின்வாரிய ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர்.
அதையடுத்து, நேற்று முன்தினம் பொன்னேரி நகராட்சி நிர்வாகத்தினர், மேற்கண்ட பகுதியில் திறந்த நிலையில் இருந்த மின்சாதன பெட்டிக்கு மூடி அமைத்தனர்.
மேலும்
-
தி.மு.க., கூட்டணியில் மகளுக்கு சீட் கேட்கும் ராமதாஸ்
-
தேசியம் பேட்டி
-
கோர்ட்டில் திரிணமுல் - ஈ.டி., மோதல்: கோபத்துடன் வெளியேறினார் நீதிபதி
-
ஜி.டி.பி., 7.50% வளரும் என்கிறது எஸ்.பி.ஐ.,
-
இந்தியாவில் ஏ.ஐ., சர்வர்களை தயாரித்து ஏற்றுமதி செய்ய 'லெனோவா' திட்டம்
-
போலி ஜி.எஸ்.டி., நோட்டீஸ் பற்றி எச்சரிக்கை