அரசு கல்லுாரி மாணவர்களுக்கு புதிதாக 'லேப்டாப்' வழங்கல்

திருத்தணி: திருத்தணி அரசு கல்லுாரியில், 689 மாணவ - மாணவியருக்கு, நேற்று லேப்டாப் வழங்கப்பட்டது.

தமிழக அரசு 'உலகம் உங்கள் கையில்' திட்டத்தின் மூலம், திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லுாரி, பாராமெடிக்கல் கல்லுாரி மற்றும் திருத்தணி அரசு கலைக் கல்லுாரியைச் சேர்ந்த 821 மாணவ - மாணவியருக்கு லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம், திருத்தணி அரசு கல்லுாரி வளாகத்தில் நடந்தது.

இதில், அமைச்சர் நாசர், கலெக்டர் பிரதாப், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் சந்திரன், ராஜேந்திரன், கிருஷ்ணசாமி, கோவிந்தராஜு மற்றும் சுதர்சனம் ஆகியோர் பங்கேற்று, இரவு 7:00 மணிக்கு, 30 மாணவ - மாணவியருக்கு மட்டும் லேப்டாப் வழங்கி, மீதமுள்ளோருக்கு நாளை (நேற்று) வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. நேற்று காலை திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயகுமார் மற்றும் கல்லுாரி முதல்வர் ஏகதேவசேனா ஆகியோர், திருத்தணி அரசு கல்லூரிக்கு வந்தனர்.

பின், அரசு கல்லுாரி மாணவ - மாணவியர் 689 பேருக்கும் லேப்டாப் வழங்கப்பட்டன. அதேபோல், திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லுாரி மற்றும் பாராமெடிக்கல் கல்லுாரி மாணவ - மாணவியருக்கும் நேற்று வழங்கப்பட்டது.

Advertisement