சோதனை சாவடி திறப்பு

போத்தனுார்: கோவை போத்தனூர் போலீஸ் ஸ்டேஷன் சார்பில், போத்தனூர் - செட்டிபாளையம் சாலை, ஈச்சனாரி சாலை சந்திப்பில், சோதனை சாவடி கட்டும் பணி கடந்த மூன்று மாதங்களாக நடந்தது. காமராக்கள் பொருத்தப்பட்டன.

நேற்று இதன் திறப்பு விழா போத்தனுார் போலீஸ் சரக உதவி கமிஷனர் கனகசபாபதி தலைமையில் நடந்தது.

போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் திறந்து வைத்தார். துணை கமிஷனர் கார்த்திகேயன், உதவி கமிஷனர் மகேஸ்குமார், போத்தனூர் இன்ஸ்பெக்டர் அசோக்குமார், எஸ்.ஐ.. மாடசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement