மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

மதுராந்தகம்: மொறப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி, பிளஸ் - 1 மாணவ - மாணவியருக்கு இலவச சைக்கிள் வினியோகம் செய்யப்பட்டது.

மதுராந்தகம் -- உத்திரமேரூர் மாநில நெடுஞ்சாலை ஓரம், மொறப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ளது.

இப்பள்ளியில் பிளஸ் - 1 பயிலும், 85 மாணவ - மாணவியருக்கு, உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர், ஒன்றிய செயலர் தம்பு பங்கேற்று, இலவச சைக்கிள்களை வழங்கினர்.

மேலும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் - 2 வகுப்பில், பள்ளி அளவில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவ - மாணவியருக்கு ஊக்கத்தொகை வழங்கினர்.

Advertisement