பிரான்ஸ் சைபர் தாக்குதலால் முடக்கப்பட்ட பாரிஸ் நகர அஞ்சல், வங்கி சேவை
பாரிஸ்: சைபர் தாக்குதல்கள் காரணமாக பிரான்சில், அஞ்சல் மற்றும் வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டதையடுத்து, பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகினர்.
ஐரோப்பிய நாடான பிரான்சில், கிறிஸ்துமஸ் பண்டிகை பரபரப்புக்கு நடுவே, தேசிய அஞ்சல் சேவையான லா போஸ்ட் மற்றும் அதன் வங்கி பிரிவான லா பேங்க் போஸ்டல் ஆகியவற்றின் ஆன்லைன் சேவைகள் சைபர் தாக்குதல் காரணமாக நேற்று முடக்கப்பட்டன. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான பார்சல்கள் மற்றும் பணப்பரிமாற்றங்கள் அதிகளவில் நடைபெறும் முக்கியமான நேரத்தில் இந்த முடக்கம் நிகழ்ந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
ஆன்லைன் சேவை முடக்கத்தால், பார்சல்கள் அனுப்புவதிலும், அதனை பெறுவதிலும் தாமதமும், தடைகளும் ஏற்பட்டன. இந்த சைபர் தாக்குதலால், வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவுகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும், இது, இணையதளத்தின் சர்வர்களை முடக்கி, சேவைகளை பயன்படுத்த முடியாதவாறு செய்யும் ஒரு வகை தாக்குதல் என அஞ்சல் துறை உறுதி செய்துள்ளது.
மேலும்
-
சமூக நல்லிணக்கத்தின் அடையாளம்; கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
உன்னாவ் பாலியல் வழக்கு: பாஜ முன்னாள் எம்எல்ஏ.,வுக்கு தண்டனை நிறுத்தி வைப்பு
-
என் கணவர் பெயர் குமார், மகன் பெயர் கார்த்திகேயன்; திருமாவுக்கு நடிகை கஸ்தூரி பதில்
-
ஹிந்து இளைஞர் படுகொலைக்கு வங்கதேச இடைக்கால அரசு கண்டனம்
-
50 விமான சேவைகளை ரத்து செய்த இண்டிகோ; டில்லி, புனே உள்ளிட்ட விமான நிலையங்களில் பயணிகள் தவிப்பு
-
மின்சாரத்துறையை சீரழித்து மக்கள் வரிப்பணத்தை திமுக வீணாக்குகிறது; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு