செவிலியர்கள் போராட்டம்

சிவகங்கை: பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சிவகங்கை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் செவிலியர்கள் தொடர்ந்து 5வது நாளாக காத்திருப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட நிர்வாகிகள் ரஞ்சிதா, ராம்பிரியா தலைமை வகித்தனர். தமிழரசி, கிரேசி, செள மியன், ராஜிவ் காந்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். போராடும் செவிலியர்களின் மாநில தலைமை நிர்வாகிகளை அரசு அழைத்துப் பேசி தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டத்தில் ஈடுபடபோவதாக தெரிவித்தனர்.

அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் மாரி, செயலாளர் ராதகிருஷ்ணன், பொருளாளர் கலைச்செல்வி, மாவட்ட இணைச் செயலாளர் ராஜா முகமது, தமிழ்நாடு சத்துணவு ஓய்வுதியர் சங்க மாநில செயலாளர் பாண்டி, மாவட்ட இணைச்செயலாளர் கலைச் செல்வம் உள்ளிட்ட நிர் வாகிகள் பேசினர்.

Advertisement